News November 2, 2025
தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News November 2, 2025
தூத்துக்குடி: பக்தர்கள் கவனத்திற்கு!

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு க்ளிக் செய்து அக்கவுண்ட் உருவாக்கி உங்க விவரங்களை பதிவிட்டு முன்பதிவு பண்ணுங்க. இதில் தரிசன நேரம், வாகன நிறுத்தம், பிரசாதங்கள் என எல்லாமே தெரிஞ்சுக்கலாம். மற்றவர் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 2, 2025
தூத்துக்குடியில் மாமனாரை கொலை செய்த மருமகன்

தூத்துக்குடி 1-ம் கேட் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கும் இவரது மருமகன் அஜய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். நேற்று ஏற்பட்ட தகராறில் அஜய், ஆறுமுகத்தை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். இது சம்பந்தமாக மத்திய பாகம் போலீசார் அஜயை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 2, 2025
தூத்துக்குடி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் 32 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில்<


