News November 14, 2025

தி.மலை: நிலத்தில் கிடந்த சடலம்; கிணற்றில் வீசிய ஓனர்!

image

செங்கம், குப்பத்தை சேர்ந்த வாலிபர்கள் சாமுண்டி, அருண்குமார், ஹரிஷ், சிலம்பு ஆகியோர் நவ.12ம் தேதி முயல்வேட்டைக்கு சென்றனர். இதில், ஹரிஷ், சிலம்பு வீடு திரும்ப, சாமுண்டி, அருண்குமார் தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை இவர்கள் சேட்டு என்பவர் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளனர். செங்கம் போலீசார் விசாரித்ததில், பாஷா நிலத்தில் உள்ள மின்வேலியில் இறந்ததும், அவர் இவரை கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

Similar News

News November 14, 2025

தி.மலை: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

தி.மலை: மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி?

image

சமூக வலைதளங்கள் மூலம் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி உதவி கேட்பது போன்று சைபர் கிரைம் மோசடிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் பெயரை பயன்படுத்தி உதவி கேட்பதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. மோசடியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களும், அலுவலர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 14, 2025

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!