News November 12, 2025
தி.மலை: அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது யாசின் மகன் ரம்ஷாத் (22) இவர் இணையதளம் மூலமாக பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரை தி.மலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் மோசடியில் ஈடுபடுவதை தடுக்க அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.சுதாகர் பரிந்துரைத்ததன் பேரில், மாவட்ட கலெக்டர், ராம்ஷாதை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
Similar News
News November 12, 2025
தி.மலை: சொந்த ஊரில் வேலை, ரூ.35,000 சம்பளம்!

தி.மலை மாவட்டத்தில் தமிழக அரசின் ஒன்-ஸ்டாப்-சென்டரில் காலியாக உள்ள மைய நிர்வாகி, ஆலோசகர், IT Staff, வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு படித்திருக்கவும், சம்மந்தப்பட்ட துறைக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000-ரூ.35,000 வரை வழங்கப்படும். கடைசி நாள்:நவ.28. இந்த <
News November 12, 2025
தி.மலை: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 12, 2025
தி.மலையில் 3,000 ஆண்டுகள் பழமையான ‘பொக்கிஷம்’

தி.மலை, அடுத்த பெரும்பாக்கம், செ.அகரம் கிராம வனப்பகுதியில் பறவை ஆர்வலர் சிவக்குமார் தகவலின் படி, மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இரு இடங்களில் பாறை ஓவியங்களை கண்டறிந்தனர். கோவக்கல் என்ற பாறை முகப்பில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் முன்பகுதியில், மனித உருவம் சதுரங்களை கொண்டு வரையப்பட்டுள்ளதாகவும், ஓவியங்கள் வேட்டை சமூகத்தின் வாழ்வியலை குறிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


