News November 2, 2025
தி.மலை:போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

ஆரணி மாங்கா மரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் தன் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை (நவ.1) காலை தவற தவறவிட்டார். இந்த நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் ஆரணி போலீசார் தேடிய நிலையில் கீழே கிடந்த பணத்தை ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகத்திடம ஒப்படைத்தார்.
Similar News
News November 2, 2025
மாணவி பலாத்காரம் – வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்துார் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர், கடந்த 2022, மார்ச் 11ல், 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, குற்றவாளி சிவாவிற்கு, 20ஆண்டு சிறை மற்றும் 20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
News November 2, 2025
தி.மலை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News November 2, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

தி.மலை மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.


