News December 7, 2025
திருவாரூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
Similar News
News December 9, 2025
திருவாரூர்: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

கூத்தாநல்லூர் நகர பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற கூத்தாநல்லூர் (ரேடியோ பார்க்) பெண்கள் மேல் நிலை பள்ளியில், வரும் (13.12.2025) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 17 மருத்துவ துறை சார்ந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை எலும்பு முறிவு முதலிய சிகிச்சைகளை பெறலாம்.
News December 9, 2025
திருவாரூர்: கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நல்லிணக்கத்திற்காக கபீர் பிரஸ்கார் விருது குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. கலவரம் மற்றும் வன்முறை ஆகியவைகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பின் இணையதளம் வாயிலாக 15.12.2025குள் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகிற 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


