News November 2, 2025

திருவாரூர்: தனியாக பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு

image

முத்துப்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்துள்ள 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த தீன்ஹனீஸ் என்ற 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீன்ஹனீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Similar News

News November 2, 2025

திருவாரூர்: அரசு தொழிற்பயிற்சி சேர்க்கை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி எதிரே இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நேரடி சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகின்ற நவம்பர் 14 விண்ணப்பிக்க கடைசி தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருவாரூர் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News November 2, 2025

திருவாரூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!