News November 2, 2025

திருவள்ளூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு<<>> க்ளிக் செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 3, 2025

திருவள்ளூர்: 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

image

பூந்தமல்லி பகுதியில் நேற்று (02.11.2025) நடைபெற்ற சிறப்பு ரோந்து நடவடிக்கையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணநாத் மாலிக் என்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர். “போதை இல்லா தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

News November 2, 2025

திருவள்ளூரில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விபரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (2.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News November 2, 2025

திருவள்ளூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

திருவள்ளூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

error: Content is protected !!