News November 13, 2025
திருமணத்திற்கு Expiry Date வேண்டும்: கஜோல்

திருமணத்திற்கு Expiry Date மற்றும் Renewal ஆப்ஷன்கள் இருக்க வேண்டும் என நடிகை கஜோல் தெரிவித்துள்ளார். நீங்கள் சரியான நபரை தான் கரம் பிடித்திருக்கிறீர்களா என்பது தெரியாத போது, Renewal ஆப்ஷன் பயன்படும். சண்டைகள், முரண்கள் நிறைந்த மண வாழ்க்கையில் நீங்கள் நீண்ட நாள்கள் கஷ்டப்படக் கூடாது என்பதாக Expiry Date ஆப்ஷன் பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது கருத்தை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
Similar News
News November 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 518 ▶குறள்: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். ▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.
News November 13, 2025
IND vs SA: முதல் டெஸ்ட்டில் நிதிஷ் விடுவிப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி விடுவிக்கப்படுவதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோசெட் தெரிவித்துள்ளார். இன்று தொடங்க உள்ள தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ODI தொடரில் நிதிஷ் கலந்து கொள்வதால், அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட்டில் துருவ் ஜுரெல் விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். IND vs SA டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது.
News November 13, 2025
ஆண்களுக்கு மாதவிடாய்.. சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

ஆண்களுக்கும் மாதவிடாய் இருக்க வேண்டும் என்ற தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். ஆண்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட்டால், அந்த நேரத்தில் பெண்கள் படும் வலியை, Trauma, Feelings-ஐ அவர்களால் உணர முடியும் என்று தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு உள்ளிட்ட பல வலிகள் இருப்பதாக நெட்டிசன்கள் டிரோல் செய்தனர்.


