News November 2, 2025
திருப்பூர்: What’s App இருக்கா உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 2, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 02.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அனுப்பவும்.
News November 2, 2025
திருப்பூர் அருகே சிறுவன் கொலை?

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் ரோபிக். இவர் குடும்பத்துடன் திருப்பூர் காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர் பகுதியில் உள்ள நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது 9 வயது மகன். மில் குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 2, 2025
திருப்பூர்: போதையில் வீட்டுக்கு தீ வைப்பு

திருப்பூர், கல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்று தகராறு ஏற்பட்ட நிலையில், மது போதையில் இருந்த செல்லப்பா வீட்டிற்கு தீ வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


