News November 14, 2025
திருச்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News November 14, 2025
திருச்சி மாவட்டத்தில் 72.4 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (நவ.14) மாலை முதல் நள்ளிரவு வரை மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மண்ணச்சநல்லூர் தொகுதி சிறுகுடி பகுதியில் 22.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் துவாக்குடி பகுதியில் 10.2 மி.மீ, வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 3.8 மி.மீ என மாவட்டம் முழுவதும் 72.4 மில்லி மீட்டரும், சராசரியாக 3.02 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 14, 2025
திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 23 வயது நிரம்பிய, +2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
திருச்சி: சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு தல ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <


