News November 28, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

திருச்சி மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
திருச்சி: மழைநீரில் பயணிகளுடன் சிக்கிய ஆம்னி வேன்

அரியமங்கலம் மேம்பாலத்தின்கீழ் உள்ள பாதையில் 4 நாட்களாக தேங்கி மழைநீர் மாநகராட்சியின் நிர்வாகத்தால் வெளியேற்றபடாததால், பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன் பள்ளத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பித்தனர். அதேநேரம் தண்ணீரை வெளியேற்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 2, 2025
திருச்சி: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரும், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் ஹரிஷை தேடி வருகின்றனர்.


