News November 29, 2025

திருச்சி: பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413510 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

திருச்சி: அதிரடி காட்டிய போலீசார்

image

போலியான இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி கே.கே நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.48 லட்சம் ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை மீட்டு, மாநகர காவல் ஆணையர் காமினி பாதிக்கப்பட்டவரிடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்தார்.

News December 2, 2025

திருச்சி: 1368 கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம்

image

திருச்சி மாநகராட்சியில் ஜனவரி 2023 முதல் தற்போது வரை சாலையில் சுற்றித் திரிந்த 1,368 மாடுகளை பிடித்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உரிமை கோராத 68 கால்நடைகள் பொதுஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!