News December 1, 2025
திருச்சி: டூவீலரில் இருந்து விழுந்து பரிதாப பலி

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் வீரமணி (26). இவருக்கு ஒரு மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமணி தன் தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கபதற்காக திருவெறும்பூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது திருவெறும்பூர் ரயில்வே பாலம் அருகே டூவீலரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 2, 2025
திருச்சி: அதிரடி காட்டிய போலீசார்

போலியான இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி கே.கே நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.48 லட்சம் ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை மீட்டு, மாநகர காவல் ஆணையர் காமினி பாதிக்கப்பட்டவரிடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்தார்.
News December 2, 2025
திருச்சி: 1368 கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம்

திருச்சி மாநகராட்சியில் ஜனவரி 2023 முதல் தற்போது வரை சாலையில் சுற்றித் திரிந்த 1,368 மாடுகளை பிடித்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உரிமை கோராத 68 கால்நடைகள் பொதுஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது