News November 2, 2025
திருச்சி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<
Similar News
News November 3, 2025
திருச்சி – திருவனந்தபுரம் விமான சேவை தொடக்கம்

திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (நவ.1) முதல் தொடங்கியுள்ளது. இந்த விமானம் வாரந்தோறும் திங்கள் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட உள்ளது. மதியம் 2:20 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி வரும் இந்த விமானம், பிற்பகல் 3:05 மணிக்கு திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
திருச்சி ரயில்வே அதிகாரி எச்சரிக்கை!

திருச்சி கோட்டத்தில் பெரும்பாலான விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் உயிரழுத்த மின்சாரம் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த உயரழுத்த மின் கம்பிகள் மற்றும் அதனைத் தாங்கும் கம்பங்களின் அருகில் சென்றாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இதன் அருகில் சென்று யாரும் செல்பி எடுக்கவோ, போட்டோ எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


