News November 30, 2025

திருச்சி: கஞ்சாவுடன் வசமாக சிக்கிய வாலிபர்கள்

image

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வளநாடு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலர் ஒன்றை நிறுத்தி, அதில் வந்தவர்களை போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களது பையை சோதனை செய்ததில், அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட கனிமுகமது, கெளதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 2, 2025

திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

திருச்சி மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 2, 2025

திருச்சி: மழைநீரில் பயணிகளுடன் சிக்கிய ஆம்னி வேன்

image

அரியமங்கலம் மேம்பாலத்தின்கீழ் உள்ள பாதையில் 4 நாட்களாக தேங்கி மழைநீர் மாநகராட்சியின் நிர்வாகத்தால் வெளியேற்றபடாததால், பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன் பள்ளத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பித்தனர். அதேநேரம் தண்ணீரை வெளியேற்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 2, 2025

திருச்சி: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

image

தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரும், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் ஹரிஷை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!