News December 9, 2025
திருச்சி அருகே 50 சவரன் நகை கொள்ளை

செங்காட்டுபட்டி அடுத்த கீரம்பூர் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான சசிகுமார், சிவகுமார் ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து ஆளில்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை!

திருச்சி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
திருச்சி: வாகன பொது ஏலம் அறிவிப்பு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25 டூவீலர்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் நாளை (டிச.10) காலை 10 மணிக்கு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் இன்று (டிச.9) மாலை 5 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் நாளை (டிச.10) திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள், பார்க்கிங் மற்றும் பார்சல் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


