News November 12, 2025

திமுக, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்

image

ஈரோட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் SG சூர்யா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக, அதிமுக பம்பரமாக சுழன்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பாஜகவும் இணைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் விரைவில் பாஜக மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாம்.

Similar News

News November 12, 2025

பிரிட்டன் PM-க்கு எதிராக சதியா?

image

பிரிட்டனில் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதி பற்றாக்குறையை சந்திக்க வரிகள் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், PM கீர் ஸ்டார்மர்-ஐ பதவியில் இருந்து நீக்க, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை மறுத்துள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங், தான் PM ஸ்டார்மரை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

News November 12, 2025

IND Vs SA டெஸ்ட்: அரிதினும் அரிதாக நடந்த மாற்றம்

image

நவ.22 அன்று IND Vs SA டெஸ்டில், வழக்கத்திற்கு மாறாக போட்டி நேரம் மாற்றப்பட்டுள்ளது. டெஸ்டில் உணவு இடைவேளையை தொடர்ந்தே டீ பிரேக் கடைபிடிக்கப்படும். ஆனால் இந்த டெஸ்டில் முதலில் டீ பிரேக் காலை 11 – 11:20 மணி வரை, அடுத்ததாக மதிய உணவு இடைவேளை 1:20 – 2:00 மணி வரை கடைபிடிக்கப்படவுள்ளது. கவுஹாத்தியில் சூரியன் சீக்கிரமே உதயமாகி மறைவதால், 5 நாள்களும் போட்டியை காலை 9 மணிக்கே தொடங்க BCCI திட்டமிட்டுள்ளது.

News November 12, 2025

GST EFFECT: குறைந்துவரும் பணவீக்கம்

image

நுகர்வோர் பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 அக்டோபரில் பணவீக்கம் 0.25% குறைந்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருள்கள் -5.02%, தினசரி பயன்பாட்டு பொருள்களின் விலை குறைந்துள்ளது. GST மாற்றம் இதற்கு முக்கிய காரணம் எனப்படுகிறது. ஆனால், கல்வி, மருத்துவம், போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

error: Content is protected !!