News November 2, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

Similar News

News November 2, 2025

குடல் ஆரோக்கியத்தை சீராக்கும் மூலிகை

image

குடல் ஆரோக்கியம் சரியில்லாதவர்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம், வேகமான வாழ்க்கைமுறை & மனஅழுத்தம் காரணமாக குடல் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை சீராக்க உங்கள் கிச்சனில் உள்ள பொருளே போதும். இலவங்கப்பட்டையை ஓட்ஸ், காபி அல்லது தயிரில் சிறிதளவு சேர்த்து சாப்பிடுங்கள். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி குடல் இயக்கத்தை இது சீராக்கும். SHARE.

News November 2, 2025

மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கும் விஜய்!

image

கரூர் TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கட்சி நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது, மீண்டும் கட்சியை வலுப்படுத்துவதில் விஜய் முனைப்பு காட்டி வருகிறார். TVK நிகழ்வுகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தொண்டரணியுடன் மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்க உள்ளார். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தலைமையில் 15 பேர் கொண்ட திட்டமிடல் குழுவையும் அமைக்க முடிவு செய்துள்ளார்.

News November 2, 2025

தோனியால் பாக்., சேல்ஸ்மேன் செய்த காரியம்

image

துபாயில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார் உஸ்மான் தாரிக். ஆனால் அவருக்கோ கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை. அப்போது தான் ‘MS Dhoni: The Untold Story’ படத்தை பார்த்துள்ளார். இதில் உத்வேகமடைந்த உஸ்மான், கிரிக்கெட் பயிற்சி பெற்று 2025 கரீபியன் தொடரில் 20 விக்கெட்ஸை வீழ்த்தினார். தற்போது தேசிய பாக்., அணியிலும் இடம்பெற்று அசத்தியுள்ளார். Lion is always a lion..

error: Content is protected !!