News December 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 541
▶குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
▶பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
Similar News
News December 7, 2025
PCOS பிரச்னையால் முடி கொட்டுதா? இதோ solution!

PCOS பிரச்னையால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு முடி கொட்டுதா? கவலை வேண்டாம். இதனை ஈஸியா குறைக்கலாம். ஆளி விதைகளை ஸ்மூத்தி, தயிர் அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடுங்கள். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதோடு, முடி கொட்டுவதும் குறையும். மேலும் அதிமதுரம் டீ குடிப்பதும் உதவும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். அனைத்து பெண்களுக்கும் SHARE THIS.
News December 7, 2025
திமுகவில் கூண்டோடு இணைந்தனர்

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் அதிமுக, திமுக, தவெக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற அமைச்சர், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
News December 7, 2025
பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக, RSS: கருணாஸ்

தமிழர்களின் மத நல்லிணக்கத்தை பாஜக, RSS கலவரமாக மாற்றுகின்றன என்று கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ் மக்கள் எப்போதும் அடிபணிய மாட்டார்கள் எனக்கூறிய அவர், தீபம் ஏற்றும் தூணை விட்டுவிட்டு, ஆங்கிலேயர் வைத்த கல்லை தீபத்தூண் என்று அழிச்சாட்டியம் செய்கின்றனர் எனவும் விமர்சித்துள்ளார்.


