News November 2, 2025
திண்டுக்கல்லில் பெண் வெட்டிக் கொலை.. இருவர் கைது

திண்டுக்கல் அருகே கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் நந்தவனப்பட்டியை சேர்ந்த கலைமணி மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News November 2, 2025
திண்டுக்கல்: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

திண்டுக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின் மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News November 2, 2025
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News November 2, 2025
திண்டுக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

திண்டுக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


