News November 2, 2025
தர்மபுரியில் ஓர் குட்டி ஊட்டி!

தருமபுரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், 3000 அடி உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. இது ‘ஏழைகளின் குட்டி ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் ரம்மியமான பயணத்தை அளிக்கும் இது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் மூலிகைச் செடிகள் நிறைந்தது. காபி, மிளகு சாகுபடி இங்கு பிரபலம். வியூ பாயிண்ட், வத்தல்மலை அருவி ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இது ஒரு சிறந்த பட்ஜெட் சுற்றுலாத் தலமாகும்.
Similar News
News November 2, 2025
தருமபுரி: மாற்றுத்திறனாளிகள் 5வது மாவட்ட மாநாடு

தருமபுரி நகரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 5வது மாவட்ட மாநாடு இன்று (நவ.02) தொடங்கியது. இந்த மாவட்ட மாநாடு நவம்பர் 2 மற்றும் 3, என இரண்டு நாள் நடைபெறும். மாநாட்டின் முதல் நாளான இன்று பேரனை நடைபெற்று ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பின் பொதுமக்களும் இந்த பேரணிக்கு ஆதரவு அளித்தனர்.
News November 2, 2025
தருமபுரி: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
தருமபுரி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

தருமபுரி மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.


