News November 14, 2025
தஞ்சை: காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை

கும்பகோணத்தில் அபி என்ற இளைஞர் 17 வயது உடைய சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதற்காக தனது நண்பர் மூப்பக்கோயில், முத்தமிழ் நகரைச் சேர்ந்த பாலாஜி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சிறுமி என்பதால் திருமணம் இப்போது வேண்டாம் என அறிவுரை கூறி சிறுமியை பெற்றோரிடம் பாலாஜி அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபி, மது வாங்கி கொடுத்து பீர் பாட்டிலால் பாலாஜியை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
Similar News
News November 14, 2025
தஞ்சாவூர்: ஆற்றில் குதித்து பட்டதாரி தற்கொலை!

ஒரத்தநாடு வட்டம் காசாநாடு புதூர் பல்லாக்குத் தெருவை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி முகேஷ் (29). இவர் கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறியவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சினம்பூண்டி 3 குமுளி பகுதியில் அவரது பைக் இருந்ததை தொடர்ந்து தீயணைப்பு படையினர் காவிரியில் இறங்கி தேடிய பொழுது நேற்று இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
News November 14, 2025
தஞ்சையில் 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 118 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 1.82 லட்சம் டன் நெல் இருப்பும், 76 ஆயிரத்து 389 டன் அரிசி இருப்பும் உள்ளன. மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 1.66 லட்சம் டன் நெல் சரக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
News November 14, 2025
தஞ்சாவூர்: போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2A முதன்மைத் தேர்வு மற்றும் எதிர்வரும் குரூப்-4 தேர்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (நவ.19) தேதி முதல் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


