News November 14, 2025

தங்கம் விலை குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $20 குறைந்து $4,185-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. நேற்று (நவ.13) மட்டும் சவரனுக்கு ₹2,400 அதிகரித்து, ₹95,200-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 14, 2025

பிஹார் தேர்தல் முடிவு.. ஆரம்பத்திலேயே திடீர் திருப்பம்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜேடியூ – பாஜக கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ஆர்ஜேடி – காங்., கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. ஜேடியூ – பாஜக கூட்டணி 38, ஆர்ஜேடி – காங்., 42, ஜன் சுராஜ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிலவரம் எந்த நேரத்திலும் மாறலாம்.

News November 14, 2025

பிஹார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பமே அபாரம்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜேடியூ- பாஜக கூட்டணி 15 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்., கூட்டணி 10 இடங்களிலும், ஜன் சுராஜ் 2 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

News November 14, 2025

By Election Results: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது!

image

தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்கள் & ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளன. ஜூபிளி ஹில்ஸ் (தெலங்கானா), தரன் தரன் (பஞ்சாப்), கட்ஸிலா (ஜார்க்கண்ட்), அன்டா (ராஜஸ்தான்), டம்பா (மிசோரம்), நுவாபடா (ஒடிசா), புட்கம், நக்ரோட்டா (ஜம்மு காஷ்மீர்) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவ.11-ல் நடைபெற்றது.

error: Content is protected !!