News November 12, 2025
டெல்லி குண்டு வெடிப்புக்காக மேலும் 2 கார்கள்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் டாக்டர் உமர் அகமது, சதி செயலுக்காக மேலும் 2 கார்களை வாங்கியுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 கார்களும் எங்கே என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
12,000 பணியிடங்களை உடனே நிரப்புங்க: அன்புமணி

மருத்துவ துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல், டாக்டர்களை இடமாற்றம் செய்து, உயிர்காக்கும் துறையை சாகடிப்பதே திமுகவின் சாதனை என்று அன்புமணி விமர்சித்துள்ளார். அரசு ஹாஸ்பிடல்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவ பணியிடங்கள் வெறும் 18,000 தான் எனக்கூறியுள்ள அவர், இதில் 12,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். உடனே அந்த பணியிடங்களை நிரப்பவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 12, 2025
இறந்த மகனை அடையாளம் காட்டிய ‘Mom my first love’ டாட்டூ!

கையில் ‘Mom my first love’, ‘Dad my strength’ என மகன் குத்திய டாட்டூவை வைத்து தான், அவரை அடையாளம் காணும் நிலைக்கு ஒரு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பில், மரணமடைந்தவர்களின் உடலை அடையாளம் காண, இந்த டாட்டூ குறித்த செய்தி வெளியாக, பெற்றோர் மனமுடைந்து போயுள்ளனர். மகனின் கையில் இருக்கும் டாட்டூவை பார்த்து ஒரு நாள், ஆனந்தத்தில் கண்ணீர் வடித்த பெற்றோர் இன்று, மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர்.
News November 12, 2025
சற்றுமுன்: விஜய் கட்சியில் இணைகிறாரா பிரபலம்

திமுகவுக்கு, தவெகதான் சவாலாக இருக்கும் எனக் கூறியதால் நாஞ்சில் சம்பத்தை அறிவுத்திறன் பேச்சு பயிற்சியில் இருந்து திமுக நீக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை; தம்பி விஜய் தவெக ஆரம்பித்தது, போர் யானைகள், வாகை மலரை கொடியில் கொண்டு வந்தது என அனைத்தும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது என கூறியுள்ளார். இதனால், அவர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


