News November 14, 2025

சொன்னதும் கிடைச்சது, அதற்கு மேலும் கிடைச்சது!

image

பிஹார் தேர்தல் முடிவு குறித்த அமித்ஷாவின் கணிப்பு, தற்போது பேசுபொருளாகி உள்ளது. NDA கூட்டணி எவ்வளவு தொகுதிகள் வெல்லும் என்று அவரிடம் கேட்ட போதெல்லாம், 160 நிச்சயம், 160+ லட்சியம் என்பது போல 160+ எனப் பதிலளித்தார். ஆனால், தேர்தல் முடிவோ அவரது கணிப்பையும் கடந்து, 203 இடங்களில் தற்போது முன்னிலையில் நிற்கிறது. இதை குறிப்பிட்டு பலரும், அமித்ஷா சரியாக தான் சொன்னார் என SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

image

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?

News November 15, 2025

ராசி பலன்கள் (15.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

செண்பகப் பூவாய் சிவப்பு சேலையில் ருஹானி

image

கடைசி பென்ச் கார்த்தி படத்தின் மூலம் அறிமுகமான ருஹானி ஷர்மா, அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். ‘மாஸ்க்’ திரைப்படம், வரும் நவம்பர் 21ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!