News November 2, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) பணிகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் சேலத்தில் நவ.4ம் தேதி முதல் டிச.4ம் தேதி வரை சிறப்பு தீர்த்திருத்த முகாம் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு

Similar News

News November 2, 2025

எடப்பாடி அருகே பழக்கடையில் புகுந்த கார்!

image

சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடையில் இருந்த தாயும் மகளும் பலத்த காயமடைந்தனர். மேலும் கடையிலிருந்து அனைத்து பழங்களும் நசுங்கி வீணானது. இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2025

சேலம் வழியாக புதிய சிறப்பு ரயில் சேவை!

image

ஹூப்ளி மற்றும் இராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் (நவம்பர் 1) தொடங்கப்பட உள்ளது. இந்தச் சிறப்பு ரயில் (எண் 07355) சேலத்தில்
சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு வரும், 7.55 மணிக்கு புறப்படும். ரயில் எண் 07356 ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு வரும்,5.50 மணிக்கு புறப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். **

News November 2, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் நகரம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!