News December 9, 2025

சேலம்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

சேலம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த<> லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 9, 2025

தென்னை விவசாயிகளுக்கு சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் தென்னை பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் விபரங்கள் தற்போது, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு, இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், வட்டார வேளாண் அலுவலகங்களில் சென்று, சரி பார்த்து கொள்ளுமாறு, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

சேலம்: பறவைகள் கணக்கெடுப்பு – அழைப்பு!

image

சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் டிச.27 மற்றும் 28, 2025 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் வனத்துறை, அறிவியல் நிறுவனங்கள். தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு வனச்சரக அலுவலர் 99433-55449 தொடர்பு கொள்ளலாம்.

News December 9, 2025

சேலம்: கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும், தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 31-12-2025க்குள் http://umis.tn.gov.in/ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!