News November 2, 2025

சென்னை: பிரபல யூ-டியூபருக்கு நோட்டீஸ்!

image

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரீட் அண்ட் பாலோ என்ற படத்தை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் அளித்த புகாரில், ஆதம்பாக்கம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்துள்ளனர். சம்மனை வாங்க சவுக்கு சங்கர் மறுத்ததால், நேற்று அவரது அலுவலகத்தில் போலீசார் ஒட்டி சென்றுள்ளனர். அதில், விசாரணைக்கு இன்று (நவ.2) ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

சென்னையில் மின்நுகர்வோர் கூட்டம்

image

மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் கோட்டங்களில் நாளை (நவ.04) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News November 2, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (02.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News November 2, 2025

சென்னையில் வரப்போகும் RRTS ரயில்கள்

image

சென்னையில் மெட்ரோவிற்கு இடையே இன்னொரு பக்கம் RRTS ரயில் சேவையும் வர உள்ளது. இதற்கான சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. பரந்தூரைச் சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும் வகையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.

error: Content is protected !!