News November 12, 2025

சென்னை: இறந்த தம்பியை பார்த்து சகோதரி உயிரிழப்பு

image

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தோர் வின்சென்ட் ஆரோக்கியநாதன், 72, வேளாங்கண்ணி தாமஸ், 77. இருவரும், உடன் பிறந்தவர்கள். திடீரென உடல்நல குறைவால் வின்சென்ட் ஆரோக்கியநாதன் இறந்தார். தம்பி இறந்ததை அறிந்த வேளாங்கண்ணி தாமஸ், கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதபோது, திடீரென மயங்கி விழுந்த வேளாங்கண்ணி தாமஸ், அங்கேயே உயிரிழந்தார்.

Similar News

News November 12, 2025

சென்னையில் 342 வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை, ஏப்ரல் மாதத்திலிருந்து 342 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும், அவை அனைத்தும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் ஏ.அருண் தெரிவித்தார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒவ்வொரு மின்னஞ்சலிலும் பதிவு செய்யப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

News November 12, 2025

சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் புதிய அத்தியாயம்

image

டிசம்பர் முதல் வாரத்தில், பனகல் பூங்காவிலிருந்து நந்தனம் வழியாக போட் கிளப் வரை 1.9 கி.மீ தூரத்திற்கு சுரங்கப் பாதைக்கு அடியில் செங்குத்தாக சுரங்கப்பாதை CMRL அமைக்க உள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பம், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நந்தனம் நிலையத்தையோ (அ) அதன் சுரங்கப்பாதையையோ எந்த வகையிலும் பாதிக்காமல் இந்த பணியை மேற்கொள்ள வழிவகுக்கிறது.இது சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும்.

News November 11, 2025

தோட்டா தரணிக்கு ‘செவாலியே விருது!

image

தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது வழங்கப்பட உள்ளது
இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மிக உயரிய ‘செவாலியே’ (Chevalier) விருது வழங்கப்பட உள்ளது. வரும் நவ- 13ஆம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் இந்த செவாலியே’ விருது வழங்கப்படுகிறதுதமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

error: Content is protected !!