News November 1, 2025
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
Similar News
News November 2, 2025
ஒமந்தூரார் மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் அறிமுகம்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.500-ல்,வெறும் 2 நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை மூலம் ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்
News November 1, 2025
சாலைகளை சீரமைக்க ரூ.15 கோடி செலவில் புதிய திட்டம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமாவதை தொடர்ந்து 15 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சாலை பணியாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட இருக்கிறது. வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் ₹37 கோடியில் 286 சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தற்போது, 257 சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நிலைக்குழு (பணிகள்) தலைவர் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
சென்னையில் நவ :5 ல் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம்

சென்னையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் அனைத்து மாவட்டத்தின் செயலாளர்கள் உடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் அ.தி.மு.கவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் பின்பு இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.


