News November 1, 2025
செங்கோட்டையனுக்கு எதிராக ஆதாரம் வெளியிட்ட EPS

கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாலேயே செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில், MGR, ஜெயலலிதாவின் போட்டோ இல்லை என நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன், கருணாநிதி போட்டோவுடன் இருந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் எனக் கூறி ஆதாரத்தை காட்டினார்.
Similar News
News November 2, 2025
லெனின் பொன்மொழிகள்

*நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
*பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
*நம்பிக்கை நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
*அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.
*பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
*அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.
News November 2, 2025
காந்திக்கு பிறகு மோடி தான்: RN ரவி

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News November 2, 2025
நவம்பர் 2: வரலாற்றில் இன்று

*1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீஷியஸ் சென்றனர்
*1903 – பரிதிமாற்கலைஞர் நினைவுநாள்.
*1936 – BBC நிறுவனம், தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
*1965 – ஷாருக்கான் பிறந்தநாள்.
*1995 – நிவேதா தாமஸ் பிறந்தநாள்.


