News November 14, 2025

செங்கல்பட்டு: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

செங்கல்பட்டு மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக் <<>>செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News November 14, 2025

செங்கல்பட்டு: சாலையில் படுத்திருந்த மாடால் விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றிரவு, சாலையின் நடுவே படுத்திருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற முஜிப் (21) என்ற நபர் மோதி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 14, 2025

செங்கல்பட்டு: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

செங்கல்பட்டு: லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

image

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பிரவின்குமார் என்பவரின் 2,400 சதுர அடி நிலத்தை பத்திர பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார் பதிவாளர் ரேவதி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (நவ.13) கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!