News November 26, 2024
செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டில் நாளை (நவம்பர் 27) பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்து கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

இன்று செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 7, 2025
சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்

வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் – தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
News August 7, 2025
சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் செங்கல்பட்டு

கார் உற்பத்தி அதிகம் என்பதாலே ஆசியாவின் டெட்ராய்டு என்ற பெயர் சென்னைக்கு உண்டு. சென்னையின் இந்த பெருமைக்கு செங்கல்பட்டும் காரணம் . ஆட்டோ மொபைல் துறையில் சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மறைமலை நகரில் Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. *சென்னைக்கே பெருமை சேர்க்கும் நம்ம மாவட்ட பெருமையை ஷேர் பண்ணுங்க*