News November 12, 2025
சீக்ரெட் சர்வே எடுக்கிறாரா EPS?

தேர்தல் நெருக்கத்தில் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் சர்வே எடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை தனது கட்சியினரிடமே சர்வே அசைன்மெண்ட்டை EPS கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு, பாஜகவுடனான கூட்டணி உதவுகிறதா, யாருடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு ஓட்டு வரும் என சர்வே எடுக்கப்படவுள்ளதாம். இதனை வைத்தே அடுத்த கட்ட நகர்வை EPS முடிவு செய்யவுள்ளார் என்கின்றனர்.
Similar News
News November 12, 2025
₹70 கோடி வசூலை வாரி குவித்த ‘பைசன்’

துருவ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான ‘பைசன்’ படம், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம், 25 நாள்களை கடந்து உலகளவில் ₹70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், லால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருந்தார்.
News November 12, 2025
தோட்டா தரணியை வாழ்த்திய CM ஸ்டாலின், EPS

பிரான்ஸ் அரசின் ‘செவாலியே’ விருதை பெறவுள்ள தோட்டா தரணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Oxford-ல் ஒளிரும் பெரியாரின் ஓவியத்தை தந்த தோட்டா தரணிக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார். EPS தன் வாழ்த்து செய்தியில், கலை இயக்கத்தில் மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த தரணியின் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமொரு முத்தாய் ஜொலிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
News November 12, 2025
விலை தாறுமாறாக உயரப்போகிறது

சிமெண்ட் விலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலம், GST சீர்திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் சிமென்ட் விலை சராசரியாக ₹6 வரை குறைந்திருந்தது. தற்போது தேவை அதிகரித்துள்ளதால் நாடுமுழுவதும் சிமெண்ட் மூட்டைகளின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இதை உடனே ஷேர் செய்யுங்க..


