News November 2, 2025
சிவகாசி கோட்டத்தில் மின்தடை அறிவிப்பு

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வருகின்ற செவ்வாய் கிழமை (04:11:2025 ) அனுப்பன்குளம், பேராபட்டி, சுந்தராஜபுரம், மீனம்பட்டி, நாராணபுரம், செல்லியநாயக்கன்பட்டி, சின்னகாமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Similar News
News November 3, 2025
அருப்புக்கோட்டை CSI தேவாலயத்தில் கல்லறை திருநாள்

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மதுரை சாலையில் அமைந்துள்ள CSI இமானுவேல் தேவாலயத்தில் இன்று கிறிஸ்தவ கல்லறை திருநாள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று தங்கள் மறைந்த உறவினர்களின் கல்லறைகளில் மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். தேவாலய பாதிரியார் சிறப்பு வழிபாடு நடத்தி ஆசீர்வாதம் வழங்கினார்.
News November 2, 2025
ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சியில் கனிமவள நிதியிலிருந்து ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையையும் MLA S.தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் ஊராக வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 2, 2025
விருதுநகரில் நாளை முதல் வீடு தேடி வரும்

விருதுநகரில் வயதான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை, நாளை மறுநாள்(நவ.3,4) இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைபதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


