News November 2, 2025
சிறுகமணியில் காளான் வளர்ப்பு கட்டணப் பயிற்சி

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு குறித்த கட்டணத்துடன் கூடிய சான்றிதழ் பயிற்சி நவ.6ம் தேதி காலை 9.30 – மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், பல்வேறு வகை காளான்களை கண்டறிதல், வளர்ப்பு, நிர்வாகம், காளான் வளர்ப்பு தொழில் முனைவோர்களின் அனுபவ உரை, சந்தை தகவல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News November 2, 2025
திருச்சி: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

திருச்சி மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News November 2, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்தம் – உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை 04332-260576, ஶ்ரீரங்கம் 0431-2230871, மேற்கு 0431-2410410, கிழக்கு 0431-2711602, திருவெறும்பூர் 0431-2415731, லால்குடி 0431-2541500, மண்ணச்சநல்லூர் 0431-2561791, முசிறி 0432-6260335, துறையூர் 0432-7222392 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


