News November 14, 2025
சினிமாவில் சாதி வேண்டாம்: அண்ணாமலை

திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்ற விஷயங்களை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் அனைவருக்கும் பொருப்பு இருப்பதாகவும், கோவை மாணவி விவகாரத்தில் போலீஸார் தங்கள் வேலையில் கோட்டை விட்டதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், CM ஸ்டாலின் காவல்துறையை இன்னும் சிறப்பாக கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 14, 2025
NDA கூட்டணி ஊழல் அற்றது: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் களம் சூடுபறக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், தேர்தலுக்காக வாக்குறுதியை மட்டும் கொடுப்பதே திமுகவின் வாடிக்கை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மக்களுக்காக எதையும் செய்யக்கூடிய, ஊழல் இல்லாததாக NDA கூட்டணி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மகளிர் உரிமைத்தொகையைக் கூட 2.5 ஆண்டுகள் கழித்தே திமுக அரசு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
News November 14, 2025
Bussiness 360°: IT நிறுவனங்களுக்கு 99 பைசாவில் நிலம்

*அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ₹88.68 ஆனது. *இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 47% குறைந்து 75.6 லட்சம் டன்னாக சரிந்தது. *ஆயுள் காப்பீடு வணிகத்தில் மஹிந்திரா கால் பதிக்கிறது. *Accenture, Infosys நிறுவனங்களுக்கு ஆந்திராவில் 99 பைசாவில் நிலம். *111 நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி 10% அதிகரிப்பு. *பாலியெஸ்டர் மூலப்பொருள்களுக்கான தரக்கட்டுப்பாடு நீக்கம்.
News November 14, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுக, ஓபிஎஸ், டிடிவி கட்சியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஒசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் S.புருசோத்தமரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.


