News November 14, 2025
சற்றுமுன்: விடுமுறை… 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல இன்றுமுதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 920 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், TNSTC செயலி, www.tnstc.in இணையதளம் மூலம் சுமார் 15,000 பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீங்க டிக்கெட் புக் பண்ணியாச்சா?
Similar News
News November 14, 2025
உங்கள் மூக்கை பற்றி இந்த சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

அன்றாடம் பல வாசனைகளை நாம் முகர்கிறோம். இதில் சுமார் 50,000 வெவ்வேறு வாசனைகளை உங்கள் மூளையில் உள்ள ’olfactory bulb’ என்ற பகுதி நினைவில் சேமித்து வைத்திருக்குமாம். இதுதான், ஒரு வாசனைக்கு பின்னால் இருக்கும் நினைவையும் பாதுகாத்து வைக்கிறதாம். இதனால்தான் ஒருவரின் பெயர் அல்லது முகத்தை மறந்தால் கூட அவர்கள் தொடர்புடைய வாசனையை உங்களால் மறக்க முடிவதில்லை. SHARE.
News November 14, 2025
பிரபல நடிகை காலமானார்… கண்ணீருடன் குவியும் இரங்கல்

<<18284857>>நடிகை காமினி கௌஷல்(98)<<>> காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புகழ்பெற்ற பிலிம்பேர் பத்திரிகை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், காமினி இந்திய சினிமாவின் முகம் என பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும், தங்களது அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் பெண்ணும் அவர்தான் என 1952-ல் வெளியான அட்டைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஒரு லெஜென்டை பாலிவுட் சினிமா இழந்திருப்பது பெரும் சோகம். RIP
News November 14, 2025
வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

நம்மில் பலர் என்னுடைய ஒரு வாக்கா வெற்றியை தீர்மானிக்க போகிறது என ஏளனமாக பேசுவதுண்டு. ஆனால் பிஹாரில் சந்தேஷ் தொகுதி முடிவு ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு உணர்த்தும். அங்கு ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராதா சரண் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். RJD-யின் திபு சிங் 8010 வாக்குகள் பெற்ற நிலையில், ராதா 80072 வாக்குகள் பெற்றுள்ளார்.


