News November 14, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகை காமினி கௌசல்(98) காலமானார். 1946-ல் NEECHA NAGAR படத்தின் மூலம் திரையுலகில் அவர் அறிமுகமானார். இந்தியாவில் இருந்து இந்த ஒரு படம் மட்டுமே கான் பட விழாவில் Palme d’Or விருது வென்றுள்ளது. திலீப் குமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த காமினி, கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News November 14, 2025
ஆடம்பர கார்களுக்கு தடை விதியுங்கள்: SC

இந்தியாவில் EV பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், உயர் ரக பெட்ரோல்/டீசல் கார்களை தடை செய்வது பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என SC அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில், VIP-க்கள் மட்டுமே இந்த கார்களை பயன்படுத்துவதால், இது சாமானியர்களை பாதிக்காது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். EV கொள்கையை திருத்தவும் மத்திய அரசுக்கு SC வலியுறுத்தியுள்ளது.
News November 14, 2025
உதிரி கட்சியாக இருக்கக்கூட ADMK-க்கு தகுதியில்லை: CM

SIR-க்கு எதிராக திமுக SC-ல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், SIR-க்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் அதிமுக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு SIR தொடர்பான நிபந்தனைகளை அதிமுக ஏற்று கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். அதிமுகவிற்கு எதிர் கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
News November 14, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹1,280 குறைந்திருக்கிறது. காலையில் சவரனுக்கு ₹480 குறைந்த நிலையில், மதியம் மேலும் ₹800 சரிந்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,740-க்கும், சவரன் ₹93,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ₹2,400 அதிகரித்த நிலையில், இன்று ₹1,280 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


