News December 7, 2025
சற்றுமுன் அதிரடி கைது

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News December 9, 2025
தெரு நாய்க்கடி.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தெரு நாய்க்கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு உரிய ஆலோசனை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு உணவு தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக

ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதியில் இருந்து, டிச.18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், 25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 9, 2025
ECI-ஐ வைத்து ஜனநாயகத்தை சிதைக்கும் மத்திய அரசு: ராகுல்

உடனே SIR பணிகளை நிறுத்த வேண்டும் என லோக் சபாவில் நடத்த விவாதத்தில், ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும் பிரேசில் மாடல் போட்டோ இந்திய வாக்காளர் பட்டியலில் வந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். ஜனநாயகத்தை சிதைப்பதற்காக ECI-ஐ பயன்படுத்துகிறது மத்திய அரசு என்றும் அவர் விமர்சித்துள்ளார். அனைத்து இந்திய அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


