News November 2, 2025

கோவை: What’s App இருக்கா உஷார்

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News November 2, 2025

கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 2, 2025

கோவையில் கிரிக்கெட் மைதானம் இதுதான்

image

கோவை ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை சாலையில் 20.72 ஏக்கரில் அமைய உள்ள மைதானத்தில் வலைப் பயிற்சி இடம், உணவகம், உயர் தர இருக்கை வசதி, பயிற்சி அரங்கம், வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட இடம்பெற உள்ளன. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ள நிலையில் அமைய உள்ள மைதானம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது வடிவமைப்பு நிறுவனம்.

News November 2, 2025

கோவை: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்

image

கோவை மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)

error: Content is protected !!