News December 1, 2025
கேப்டன் கில்லின் நிலை என்ன?

SA-வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் & ODI தொடரில் இருந்து விலகிய அவர், இன்று BCCI-யின் சிறப்பு மையத்தில் (CoE) பயிற்சியை தொடங்கவுள்ளாராம். ஓரிரு நாள்களில் பேட்டிங் பயிற்சியை அவர் தொடங்குவார் என்றும், அதை தொடர்ந்தே SA-வுக்கு எதிரான T20 போட்டிகளில் கில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News December 3, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த மாஸ் வில்லன்

ரஜினியின் ‘ஜெயிலர்’ வெற்றி பெற்றதில், வில்லனாக (வர்மன்) நடித்திருந்த விநாயகனுக்கும் முக்கிய பங்குண்டு. முதல் பாகத்தில் இவர் இறப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும், ஜெயிலர் 2-விலும் வர்மன் கதாபாத்திரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரே ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் படக்குழு விதித்துள்ள கட்டுப்பாட்டால், அதைப்பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்றும், அவர் கூறியுள்ளார்.
News December 3, 2025
மகாத்மா காந்தி பொன்மொழிகள்!

*பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை. நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள். *மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. *கோபம் அஹிம்சையின் எதிரி. அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன் எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.
News December 3, 2025
கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன்

புதுச்சேரியில், செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஏற்கெனவே நாதகவின் நிர்வாகிகள் சுந்தரபாண்டி, செல்வம் ஆகியோர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில், டிச.8-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர்.


