News November 2, 2025

குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி: செல்வப்பெருந்தகை

image

SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம், CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

Similar News

News November 2, 2025

தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

image

பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த பாதாம் நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

News November 2, 2025

பக்தி படம் இயக்கும் ‘பாட்ஷா’ இயக்குநர்

image

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் தற்போது சத்ய சாய் பாபா பற்றி ‘அனந்தா’ என்ற பக்தி படத்தை இயக்கி வருவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

நடிகை அர்ச்சனா தற்கொலையா? CLARITY

image

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!