News November 14, 2025
‘கும்கி 2’ படத்தை வெளியிட HC அனுமதி

பிரபு சாலமன் வாங்கிய கடனுக்காக ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை HC <<18267148>>இடைக்கால தடை<<>> விதித்திருந்தது. இந்நிலையில் பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே, வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட HC, ‘கும்கி 2’ படத்தை வெளியிட அனுமதி கொடுத்தது. அதேநேரம் ₹1 கோடியை கோர்ட்டில் செலுத்த பிரபு சாலமனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
பட்ஜெட் கார்களுக்கு சூப்பர் சலுகைகள்

பட்ஜெட் கார் வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது பொன்னான நேரம். GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்திருக்கின்றன. மேலும், நவம்பரில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ₹10 லட்சம் பட்ஜெட்டில் உள்ள கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த கார் வாங்க பிளான் பண்ணுறீங்க?
News November 14, 2025
BREAKING: பிரபல சினிமா இயக்குநர் வி.சேகர் காலமானார்

தமிழ் சினிமா இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னையில் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. 90’ஸ் காலக்கட்டத்தில் விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்ட குடும்ப பின்னணி கொண்ட பல ஹிட் படங்களை இயக்கிய அவர், பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். RIP
News November 14, 2025
பெரும் பின்னடைவில் காங்: ராகுல், பிரியங்கா எங்கே?

பிஹார் தேர்தலில் காங்., 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்.,கின் முகமாக அறியப்படும் ராகுல் காந்தியின் பிரசாரம் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸார் புலம்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியாகும் இன்றும் ராகுல் ஐரோப்பாவிலும், பிரியங்கா நியூயார்க்கிலும் உள்ளனர். இதனால் தேர்தலை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


