News November 2, 2025

குடியாத்தம் அருகே வசமாக சிக்கிய திருடர்கள்!

image

குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியில் டவுன் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 2 பேரை விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னையை சேர்ந்த தாஸ் (30), சூர்யா (25) என்பதும், குடியாத்தம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

வேலூர்: தாயுமானவர் திட்ட பொருட்கள் விநியோகம்!

image

2025ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின்கீழ் பொருட்களை வழங்கும் வகையில் நாளை நவ.03 மற்றும் 4-ஆம் தேதிகளில் “தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது” என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர். 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*

News November 2, 2025

வேலூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!