News November 14, 2025
கிருஷ்ணகிரி : லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
Similar News
News November 14, 2025
இரவு ரோந்து காவலர்கள் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும்

கிருஷ்ணகிரி நவம்பர் 14 இன்று இரவு ரோந்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் விபரம் காவல்துறை அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வெளியானது. தனிப்பட்ட மொபைல் எண் அல்லது இலவச மொபைல் எண் 100,112 என்னில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News November 14, 2025
கிருஷ்ணகிரியில் நாளை எங்கெல்லாம் கரண்ட் கட்?

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 14, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


