News December 5, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 7, 2025
கிருஷ்ணகிரி: கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது

ஓசூர் அருகே அதிமுக பிரமுகர் ஹரீஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் விசாரணையில், ஹரீஷ் தனது கள்ளக்காதலி மஞ்சுளாவிடம் இருந்து ரூ.80 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், மஞ்சுளாவின் மற்றொரு ஆண் நண்பர் மோனிஷ் உடன் பழகக்கூடாது எனத் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்த மஞ்சுளா கூலிப்படை ஏவிக் கொலை செய்தது தெரியவந்தது. மஞ்சுளா, மோனிஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் பின்பக்க தலையில் அடிபட்டு பலி!

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாதநபர் ஒருவர் கிருஷ்ணகிரியிலருந்து ஓசூரை நோக்கி பேரண்டபள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று (டிச.6) மாலை வரும் பொழுது. பின்னால் வந்த அடையாளம் தெரியாத வண்டி இடித்துச் சென்றதில் கீழேவிழுந்து பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் போலீசார் இறந்த நபர் மற்றும் அவரை இடித்துச் சென்ற வாகனம் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.07) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


