News November 12, 2025
கிருஷ்ணகிரியில் நாளை எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரி, பாகலூர் & நரிகானபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (நவ.13) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், முத்துகானப்பள்ளி, சத்தியமங்கலம், பலவனப்பள்ளி, நரிகானாபுரம், பேரிகை, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மணி முதல் 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
கிருஷ்ணகிரி: காணாமல் போனவர் ஏரியில் பிணமாக மீட்பு!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவராம் சிங் (22) தனது மனைவி & 2 குழந்தைகளுடன், அக்கொண்டப்பள்ளியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக இவரை காணவில்லை என இவர் மனைவி புகாரளிக்க, கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அக்கொண்டபள்ளியில் உள்ள ஏரியில் போலீசார் அவரது உடலை மீட்டனர். அவரது உடலை கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 12, 2025
ஓசூருக்கு ஓர் குஷியான செய்தி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் சைட் கிளியரன்ஸ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில், பேரிகை–பாகலூர் அருகே பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்துதல் தொடங்கப்படும், எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


