News November 14, 2025

காவேரிப்பாக்கம் பகுதியில் கைபேசி சேவையியல் ஆய்வு

image

(நவ.14) காவேரிப்பாக்கம் ஊராட்சியில் கைபேசி பயன்பாடு, SIR படிவம் மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் நேரடியாக வீடு தோறும் சென்று மக்களிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கைபேசி சேவையில் குறைகள், வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் பொதுசேவை தொடர்பான கேள்விகள் உள்ளிட்டவற்றை மக்கள் முன்வைத்தனர். அதிகாரிகள் ஒவ்வொன்றாக பதிவு செய்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

Similar News

News November 14, 2025

மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கிய ஆட்சியர்

image

கட்டளை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (நவ.14) தேதி ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வு செய்தார் .அப்போது குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் சந்திரகலா சாக்லேட் வழங்கினார்.மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எவ்வாறு எடுக்கிறார். மாணவர்களின் கற்றல் மற்றும் எழுதும் திறன் எப்படி உள்ளது என்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.

News November 14, 2025

எஸ் ஐ ஆர் படிவம் பதிவேற்றம் ஆட்சியர் அறிவுரை

image

கொண்டாபுரம் கிராமத்தில் இன்று (நவ.14)
தேதி எஸ் ஐ ஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்வது குறித்து ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்கள் பதிவேற்றம் செய்யும்போது எந்தவித தவறும் செய்யக்கூடாது. கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்தார்.

News November 14, 2025

ஐயப்ப பக்தர்கள் சாப்பாட்டில் பல்லி மருத்துவ குழு ஆய்வு

image

புதுப்பட்டில் உள்ள முனியாண்டி ஹோட்டலில் ஐயப்ப பக்தர்கள் உடை அணிந்து இன்று நவ.14ம் தேதி 20 பேர் சாப்பிட்டுள்ளனர் .அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் 20 பேர் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.

error: Content is protected !!