News September 26, 2025
காலாண்டு கடைசி தேர்வு அக்.6ம் தேதி நடைபெறும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு நடைபெற்று வந்தது.இன்று கடைசி நாள் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறவில்லை. இதனைத்தொடர்ந்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் (அக்.6ம் தேதி) காலாண்டு தேர்வின் கடைசி தேர்வு நடைபெறும் என்று மாவட்ட கல்வி அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகள் நடவடிக்கை

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனையில் காஞ்சிரக்கோடு எந்த இடத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை கண்டுபிடித்தது பறிமுதல் செய்தனர். இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News November 14, 2025
நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6 மாலை 6:30 இரவு 7 மற்றும் 7:30 மணிகளில் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது. (இதன் பயண கட்டணம் ரூ.364) SHARE
News November 14, 2025
குமரியில் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்த இஸ்மாயில்(34), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜபர்(67), முள்ளூர்துறை சகாயதாசன்(52),சுந்தரய்யா மீது குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். நாகர்கோவில் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த விசாரணையில் நேற்று நீதிபதி சுந்தரய்யா, இஸ்மாயில் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை, ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


